மக்களை கவரும் அறிவிப்புகள்1. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும்2.பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி3. பள்ளி பாடத்திட்டத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும்4. ஆண்டு தோறும் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் - ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.6. ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.மகளிருக்கான அறிவிப்புகள்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம்மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி; புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடுசென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்ரூ.77 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்ரூ.75 கோடி மதிப்பீட்டில் நகர்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம்.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மெற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு, ரூ.50 கோடியில் 500 அரசுப்பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சிசுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.ரூ.65 கோடியில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்,ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.5 ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கைஅரசுப்பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும், வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்குன்னூர்,நத்தம் உள்ளிட்ட பகுதிகள் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் ,அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும். நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்.சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.2423 கோடியில் செயல்படுத்தப்படும். ரூ.602 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.152 கோடி மதிப்பில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் அறிவியல் மையம் அமைக்கப்படும் சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.