கூல் லிப்-க்கு தடை விதிக்கும் வழக்கில், புகையிலை தயாரிப்பு நிறுவனங்களை எதிர் மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கூல்-லிப்பை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது? என்பதற்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.