தமிழகத்தில், வரும் 20ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதன்கிழமையன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திண்டுக்கல். தேனி, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.