தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென் இந்தியா மற்றும் அதனை ஒட்டிய வங்காள விரிகுடாவில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி காற்று வீசுவதோடு, தென்கிழக்கு பகுதியில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.நாளை சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.