தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்குப் பருவமழை முழுவதுமாக விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தென்னிந்திய பகுதிகளில் மழை எதுவும் பெய்யவில்லை என்றும், வட இந்திய பகுதிகளில் இருந்து வறண்ட காற்று வீசி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.