Tata அறக்கட்டளைகளின் புதிய தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Dorabaji Tata அறக்கட்டளையின் 11 ஆவது தலைவராகவும், ரத்தன் டாடா அறக்கட்டளையின் ஆறாவது தலைவராகவும் அவர் இருப்பார் எனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. டாடா அறக்கட்டளைகளை டாடா சன்ஸ் நிர்வகித்து வருகிறது. மும்பையில் நடந்த டாடா சன்ஸ்-ன் போர்டு மீட்டிங்கில் 67 வயதான நோயல் டாடா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.டாடா அறக்கட்டளையின் கீழ் 14 அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றுக்கு டாடா சன்ஸ்-ல் 66 சதவிகித பங்குகள் உள்ளன.