அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார். சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது.சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் கூறி வந்தார். தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னியைகவர்னர் என டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார். கடந்த காலத்தில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் கவர்னர் என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. Related Link அமெரிக்க ராணுவத்தில் இணையும் F-47 போர் விமானம்