தமிழ்நாட்டில் மது ஒழிப்பு மாநாடு மற்றும் போராட்டம் யார் நடத்தினாலும் பாமக ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாடு குறித்து யாரும் தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றார். மேலும் திருமாவளவன் உட்பட அனைத்து கட்சியினரும் மது ஒழிப்பை, கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டதற்கு காரணமே மருத்துவர் ராமதாசும், பாமகவும் தான் என தெரிவித்தார்.