தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். சட்டசபையில் வண்டல் மண் தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாருக்கு பதிலளித்து பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டத்துக்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்வதில்லை என்று தெரிவித்தார். ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்து செல்வதை தடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், எடுத்து செல்லப்படும் கனிம வளங்களுக்கு உரிமை நிதியுடன் கூடுதல் நிதியாக பசுமை நிதியும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.