பாஜகவிற்கு எப்போதும் ’நோ என்ட்ரி’ தான் எனக்கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன் என்றும் சூளுரைத்தார். கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது, எந்த கொள்கை என்பது மக்களுக்கு தெரியும். 2 ஆயிரம் ஆண்டுகளாக, அந்த கொள்கைக்கு எதிராக திமுக போராடி கொண்டு உள்ளது. அந்த கொள்கையின் முகம் பாஜக. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், 'அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக' என்ற உண்மையை பேசியுள்ளார். அந்த கைப்பாவை அரசை தூக்கி எறிய திமுக தான் காரணம் என்று, நம் மீது பாஜக வன்மத்தை கொட்டுகிறது. அதனால் தான், நமக்கு எவ்வளவோ குடைச்சலை கொடுக்கின்றனர். அதனை பார்த்து முடங்குவோம் என நினைத்தனர். திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?நாட்டில் முதன்முறையாக மாநில கட்சி, ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியது நாம் தான். 74 ஆண்டுகால வரலாறு நமக்கு உள்ளது. எத்தனையோ பேர் திமுகவை அழிப்போம் என்றனர்.இப்போது கூட திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்கின்றனர். எதை மாற்றப் போகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி கொண்டு போகப் போகின்றனரா? நமது கொள்கையை விட சிறந்த கொள்கையை யாரும் பேசுகின்றனரா? மாற்றம் மாற்றம் என பேசியவர்கள் அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள்.அதிமுக தொடங்கிய போது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றனர். தற்போது இபிஎஸ், அடிமையிசம் என மாற்றி அமித்ஷாவே சரணம் என மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு? என கேட்பார்கள். டில்லியில் கார் மாறி மாறிப் போன இபிஎஸ்-ஐ பார்த்து, காலில் விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு? என கேட்கின்றனர்.டில்லியில் இருந்து பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இங்கு அடக்குமுறைக்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்துக்கு நோ என்ட்ரி தான். திணிப்புக்கு நோ என்ட்ரி தான். மொத்தத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி தான். பாஜகவை தடுக்கவில்லை என்றால், மாநிலமே இருக்கக்கூடாது என நகர்வார்கள். காஷ்மீரில் சோதனை செய்து பார்த்துவிட்டனர். தற்போது உரிமைப்போர் நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதையும் பாருங்கள்; DMK Mupperum Vizha Karur | கரூரில் திமுக முப்பெரும் விழா | MK Stalin | CM Stalin | DMK2026டெல்லிக்கே கேட்கும் அளவிற்கு முதல்வர் சொன்ன வார்த்தை.. விண்ணை பிளந்த சத்தம் | DMK | CM Stalin Speech