குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு சிறைத்துறையினர் ஆதார் கார்டு கேட்டு அலைக்கழித்ததால், குற்றவாளிகளே தங்களை நக்கலாக பார்த்து சிரிப்பதாக தூத்துக்குடி காவலர் ஒருவர் வேதனையுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஆதார் கார்டு இல்லாத காலங்களில் குற்றவாளிகளை சிறையில் அடைக்க என்ன நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் ஆதார் கார்டை காரணம் காட்டி குற்றவாளிகள் நேக்காக தப்பிக்கமாட்டார்களா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.