வரும் 21-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் 28 வது தேசிய ஃபெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யா ராமராஜ் தகுதி பெற்றார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்திய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யா ராமராஜ் 13.32 வினாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.