நிசான் நிறுவனம் முற்றிலும் புதிய பேட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் 2026ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும். முதலில், இடது-புற ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும், அடுத்ததாக வலது-புற ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.