ஹோண்டா உடனான இணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட, நிசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியில் பரவியவுடன், ஹோண்டா மற்றும் நிஸானின் பங்குகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன.