சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.அரசு முறை பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், வள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கவுள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.