உகாண்டாவில் ஷாப்பிங் மால் பால்கனியிலிருந்து தவறி விழுந்ததில் நைஜீரிய கால்பந்து வீரர் அபுபக்கர் லாவல் உயிரிழந்தார். உகாண்டா பிரீமியர் லீக் அணியான வைப்பர்ஸ் எஸ்சிக்காக விளையாடிய 29 வயதான அபுபக்கர் லாவல் கம்பாலாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள தான்சானிய நண்பரைச் சந்திக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.