வெனிசூலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் பதவியேற்றார். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் எட்முண்டோ கான்ஸெலஸ் அதிக வாக்குகள் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் பின்னர் வெளியிடப்பட்டன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதிபராக நிக்கோலஸ் மடூரோ பொறுப்பேற்றார்.