2025ம் ஆண்டு பிறந்ததை ஆஸ்திரேலியா மக்கள் வண்ணமயமான பட்டாசுகளுடன் வரவேற்றனர். சிட்னி நகரில் உள்ள உலகப்புகழ்பெற்ற துறைமுக பாலம் மற்றும் ஒபேரா ஹவுஸ் அருகில், மக்களின் கண்களை கவரும் வகையில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நடைபெற்றது.