ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் சுட்டுக் கொல்லப்பட்ட புதிய காட்சிகளை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் Mission is not over… என கூறியுள்ளது. இஸ்ரேல் மீது 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிலையில், அவர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். யாஹ்யா சின்வார் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இஸ்ரேல் படையின் ராணுவ டாங்கிகள் துல்லிய தாக்குதல் நடத்திய வீடியோவை தற்போது இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.