வானிலை சவால்களை சமாளிக்கும் அளவுக்கு தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆம் ஆண்டு நிறுவன தினவிழாவில் பேசிய அவர், அண்டை நாடுகளுக்கும் வானிலை அறிவிப்புகளை துல்லியமாக வழங்க முடியும் என்றார்.