சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிகம் விளையாடிய வீரர் என்ற பட்டியலில் தோனியை விராட் கோலி பின்னுக்குத் தள்ளினார். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தோனி 535 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம், 536 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.