புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கைதிகளை சந்திக்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி, இண்டர்காம் மூலம் மட்டுமே பேச அனுமதி என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் புழல் சிறையில் அமல்படுத்தப்பட்டுள்ளன.இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஆனந்த்குமார் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இண்டர்காம் மூலம் பேசுவது பதிவு செய்யப்படும் என அச்சம் எழக்கூடும் என்பதால், கைதிகள் நேரடியாக பேச ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.