சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோகித் ஷர்மா படைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற சாம்பிய்ன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தார். இதற்கு முன் விராட்கோலி இந்த சாதனையை படைத்தார்.