தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இதன் காரணமாக, வரும் பிப்ரவரி 21ஆம் தேதி, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18ஆம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.லேசானது முதல் மிதமான மழை 19ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20 முதல் 22ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.எங்கெங்கு கனமழை?21ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும், 22ஆம் தேதி தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.சென்னை நிலவரம் எப்படி?சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் 19, 20ஆம் தேதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. Related Link தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பறவைகள்