வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்பே இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பயிற்சியாளராக செயல்படுவார்.