கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் புதிதாக நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து புதிய கணக்கெடுப்புகள் நடத்தப்படும் என்றும், இந்த கணக்கெடுப்பு 90 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.