இஸ்ரேலின் பெண்கள் மற்றும் குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்த ஈரான் மிகப்பெரிய விலையை கொடுக்கும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் வெறித்தனமான தாக்குதலில் உருக்குலைந்த பட் யாம் ((Bat Yam )) நகரை பார்வையிட்ட நெதன்யாகு, சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், தங்களின் நோக்கத்தை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று அறுதியிட்டு கூறினார். அதோடு, இனி வரும் காலங்களில் ஈரான் மீது பெரும் பலத்துடன் தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்தார்.