நேருவும், இந்திராவும் கடந்த காலங்களில் தவறு செய்திருப்பதாக சசிதரூர் பேசியது, காங்கிரசார் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்வானியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி சசிதரூர், நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அத்வானியின் பங்கு அழியாதவை என புகழாரம் சூட்டியிருந்தார். அவரது இந்த பதிவால் கடும் கோபத்திற்கு உள்ளான காங்கிரஸ் கட்சியினர் அவரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிதரூரின் கருத்துகள் தனிப்பட்டவை என்றும், அது கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார். சசிதரூரின் அறிக்கைகள் அவரை காங்கிரஸ் தலைமையுடன் முரண்பட வைப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.