நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என கூறி மக்களை நம்ப வைத்து திமுக அரசு ஏமாற்றி விட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளதாக தெரிவித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா என கேள்வி எழுப்பிய விஜய், எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என தெரிவித்தார்.