டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் 2ம் இடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, கையில் காயத்துடன் போட்டியில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. பயிற்சியின் போது இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதனால் நடப்பு ஆண்டின் கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்பியும் முடியவில்லை என்றும் எக்ஸ்ரே புகைப்படத்தை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.