பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மலை கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன், மற்றும் இரண்டு குழந்தைகளை கோயில் நிர்வாகிகள் அழைத்து சென்றனர். தரிசனத்திற்கு பின் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் வழங்கிய பஞ்சாமிர்த பிரசாதத்தை வாங்கிய நயன்தாரா குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார்.