சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றகீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தாட்டிலை அடுத்த மாதம் கரம் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தாட்டிலும், நடிகை கீர்த்தி சுரேஷும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.