ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவின் பெயரை, எட்டர்னல் என மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொமேட்டோ லிமிடெட் என உள்ள நிறுவனத்தின் பெயரை Eternal’ லிமிடெட் என மாற்ற உள்ளதாகவும், நிர்வாக குழுவில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.