மும்பையில், Nita Ambani நடத்திய நகை எக்ஸ்போ ஒன்றில், கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான ஹீரோயின்கள் பங்கேற்றனர். வித விதமான ஆடை, நகைகளை அணிந்து அழகாக போஸ் கொடுத்தனர். நீதா அம்பானிக்கு சொந்தமான கலாச்சார மையத்தில், பெவல்காரி செபாண்டோ இன்ஃபிண்டோ (Bvlgari Serpenti Infinito) என்ற நகை கண்காட்சி நடந்தது. இதில் நடிகைகள் சமந்தா, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ், தமன்னா, திரிப்தி டிம்ரி, பிரியங்கா சோப்ரான்னு பிரபல நடிகைகள் பங்கேற்றனர். நகைகளை அணிந்து கொண்டு அழகாக ’போஸ்’ கொடுத்து உள்ளனர். நெக்லஸ், வாட்ச் என்று பாம்பு உருவத்தில் இருக்கும் நகைகளுடன், நடிகைகள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.