சமந்தாவுடனான விவகாரத்தால் ரசிகர்கள் மத்தியில் தான் குற்றவாளியை போல் நடத்தப்படுவதாக நடிகர் நாக சைதன்யா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் Raw Talks with VK Podcast என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அவர், சமந்தாவுடனான விவாகரத்து தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் சேர்ந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு என கூறினார். இது தனக்கு ஒரே இரவில் நடக்கவில்லை என்றாலும் எல்லாமே ஒரு காரணத்திற்காக நடந்தாகவும், அதற்காக தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.