மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பாபானிபூர் (Bhabanipur) சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், இந்த தொகுதியில் வீடு வீடாக சென்று அதை சரி பார்க்குமாறு தனது பூத் ஏஜன்டுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி, இந்த தொகுதியில் இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 295 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 509 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 21 புள்ளி 7 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல வாக்காளர்கள் இறந்து விட்டனர் அல்லது இடம் பெயர்ந்து விட்டனர் என குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.