உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் இரவில் வீடு புகுந்து ஆசிரியர் குடும்பமே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுனில்குமார் என்பவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் சுனில்குமார் அவரது மனைவி பூனம் பாரதி மற்றும் பெண் குழந்தைகள் இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பூனம் பாரதி, ஏற்கனவே போலீசில் சந்தன் வர்மா என்பவர் மீது கொலைமிரட்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சாதிய ரீதியிலான அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.