கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தனது மனைவிக்கு முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கியதாக கூறப்பட்ட முடா வழக்கில், 11 ஆயிரத்து 200 பக்கம் கொண்ட அறிக்கையை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் சித்தராமையா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.