கோவை மாவட்டத்தில், பெரும்பான்மையான சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாத நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் வெற்றி பெற வேண்டும் என தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதையும் பாருங்கள் - கோவை தொகுதிகள், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் | MK Stalin | DMK | one to one