ஜி.எஸ்.டி. இணை இயக்குநர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரைப்படங்களுக்கு இசையமைத்த வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது படைப்புகளின் நிரந்தர பதிப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கே வழங்கி விட்டதால் வரி விதிக்க முடியாது எனவும், நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஹாரிஸ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து 4 வாரங்களில் முடிவெடுக்கும்படி ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.