துலீப் ட்ராபி தொடரில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் 181 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் 19 வயதான முஷீர் கான் 181 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.இந்த ஆட்டத்தில் முஷீர் கான் அடித்த பந்து ஸ்டேடியத்தின் மேற்கூரையின் மீது விழுந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.