ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை கடைசி சுற்றில், அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது. முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றில், அவரின் பெயர் ஏலத்தில் விட்ட போது, மும்பை அணி உட்பட எந்த அணிகளும் அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க முன் வராததால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.