கர்நாடக முதல்வர் முதல்வர் சித்தராமையா சம்பந்தப்பட்ட முடா நில ஊழல் குறித்து மைசூரு லோக் ஆயுக்தா விசாரணையை தொடங்கியது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் ((முடா)) 14 இடங்களை முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கியதில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக சித்தராமையா உள்ளிட்டோர் மீது எழுந்த புகாரில் விசாரணை நடத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி சித்தராமையா உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் தாக்கல் செய்த மைசூரு லோக் ஆயுக்தா தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜக சித்தராமையா அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.