நடப்பு ஐபிஎல் தொடரில், பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் எம்.எஸ்.தோனி 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது அர்த்தமற்ற ஒன்று என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தோனி முன்னதாக வந்து சிஎஸ்கேவின் ரன் ரேட்டுக்கு உதவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.