இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கம்ப்யூட்டரை மிஞ்சி வியூகம் அமைப்பவர் என முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தற்போதுள்ள அனைத்து கேப்டன்களும் எதிரணியின் பலம், பலவீனத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் கணக்கிட்டு கேப்டன்ஷிப் செய்வதாக கூறியுள்ளார்