நாடாளுமன்றத்தில் டீ சர்ட் அணிந்து வந்தது தொடர்பாக திமுக எம்பிக்களை சஸ்பென்ட் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து, மக்களவைக்கு தி.மு.க.,எம்.பி.க்கள் சென்றிருந்தனர். அதனை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார்.