அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ட்ரில்லியண்ட் (TRILLIANT) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ட்ரில்லியண்ட் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது, 2 ஆயிரம் கோடி ரூபாயில் தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், சென்னையில் நைக் நிறுவனத்தின் காலணி உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்தும், ஹெல்த்கேர் பொருட்கள் தயாரிக்கும் Optum நிறுவனத்தை திருச்சி மற்றும் மதுரையில் விரிவாக்கம் செய்வது குறித்தும் அந்தந்த நிறுவன பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.