சாலையோரத்தில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த இளைஞர். விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த காவல் துறை. வழக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். அடுத்தடுத்த விசாரணையில் காத்திருந்த மெகா ட்விஸ்ட். பெற்ற தாயே மகனின் கதையை முடித்தது ஏன்.?அடித்து கொன்றுவிட்டு அக்சிடண்ட் போல் செட்டப் செய்த கொலைகார கும்பல் சிக்கியதா.?பின்னணி என்ன..?இரவு நேரம். ரோட்டோரத்துல உள்ள பள்ளத்துல பிரதீப்-ங்குற இளைஞர் ரத்த வெள்ளத்துல இறந்து கிடந்தாரு. அவரு பக்கத்துலேயே பைக்கும் கிடந்திருக்கு. தகவல் தெரிஞ்சு, ஸ்பாட்டுக்கு போய் பாத்த போலீஸ். மதுபோதையில வேகமாக வண்டிய ஓட்டிட்டு வந்து பள்ளத்துல விழுந்து தான் பிரதீப் உயிரிழந்துட்டதா நினச்சுருக்காங்க. அதுக்கப்புறம், பிரதீப் சடலத்த மீட்ட போலீஸ், அங்க உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து, அக்சிடன்ட் கேஸ்னு FIR ஃபைல் பண்ணாங்க. ஆனா, பிரதீபோட போஸ்ட்-மார்டம் ரிப்போர்ட், கேஸ அப்படியே தலைகீழ புரட்டிப் போட்ருச்சு. பிரதீப் அக்சிடன்ட்ல கீழே விழுந்து, மண்டைல அடிபட்டு இறக்கல. யாரோ அவர் தலையில ஓங்கி அடிச்சதுல தான் அவரோட உயிர் போயிருக்குன்னு போஸ்ட்-மார்டம் ரிப்போர்ட்ல தெள்ளத்தெளிவா குறிப்பிடப்பட்டிருந்துச்சு. உடனே, விபத்து வழக்க, கொல வழக்கா மாத்தி, விசாரணையில இறங்கியிருக்காங்க போலீஸ். அதுல போலீஸுக்கு பல விஷயம் தெரியவந்து ஷாக்காக வச்சிருக்குது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூர்ல உள்ள அங்கத்பூர சேந்த மம்தா சிங் மகன் தான் 25 வயசான பிரதீப். மம்தாவோட கணவர் கடந்த சில வருஷங்களுக்கு முன்னாடி உடல்நலக்குறைவால உயிரிழந்துட்டாரு. கணவன் இறந்ததுக்கு அப்புறம் மம்தா தோட்ட வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்காங்க. அப்படி தினமும் வேலைக்கு போனப்ப, அங்க கூட வேலை செய்ற மயங்க்-ங்குறவர் கூட பழக்கம் ஏற்பட்டுருக்கு. இந்த பழக்கம் நாளடைவில எல்லை மீறி போனதாவும், கடந்த ஒரு வருஷமாவே மயங்குடன் கூட மம்தா மணிக்கணக்குல ஃபோன் பேசிட்டே இருந்துருக்காங்க. வேலை பாக்க போன இடத்துல மட்டுமில்லாம, அங்க இங்கன்னு ரெண்டு பேரும் தனியா நின்னு பேசிட்டு இருந்ததா, ஊர் மக்கள் சிலர், பாத்து பிரதீப் கிட்ட சொல்லியிருக்காங்க.வீட்டுல எந்த நேரமும் ஃபோனும் கையுமாவே இருந்த தாயோட நடவடிக்கைய பாத்து, மகன் பிரதீப், தாய் மம்தா கிட்ட சண்ட போட்டுருக்காரு. தோலுக்கு மேல வளந்த பையன் இருக்கேன், இந்த வயசுல இப்படி எந்நேரமும் ஃபோன் பேசிட்டே இருந்தா எப்படி, ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்க, இனிமே நீ வேலைக்கே போகக் கூடாது, வீட்டுல இருந்தா போதும்னு பிரதீப், மம்தாக்கிட்ட கறாரா சொல்லியிருக்காரு. இவ்வளவு பிரச்சினைக்கு அப்புறமும் மம்தா, செல்போன் பேச்ச நிறுத்திக்கவே இல்ல. இந்த விஷயம் சம்பந்தமா பிரதீபுக்கும், தாய் மம்தாவுக்கும் இடையில திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்கு. செல்போன தொடவே கூடாதுன்னு மகன் சொல்ல, பதிலுக்கு மம்தா மல்லுக்கட்ட, பிரளயமே வெடிச்சிருக்கு. கோவத்துல, பிரதீப், தாய் மம்தாவ அடிச்சதா சொல்லப்படுது. இவன இப்படியே விட்ட நிம்மதியா இருக்க விடவே மாட்டான்னு நினைச்ச மம்தா தன்னோட தம்பி ரிஷியோட சேந்து மகன கொலை செய்ய திட்டம் போட்டுருக்காங்க. பெத்த மகனவிட காதலனும், பணமும் தான் முக்கியம்னு முடிவு பண்ண மம்தா, பிரதீப கொலை செய்ய பக்காவா பிளான் போட்டுருக்காங்க. பிரதீப கொலை செய்யுறதுக்கு இன்னொரு முக்கிய காரணமும் பணம். பிரதீப் பேருல ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் இருக்கு. மகன் உயிரிழந்துட்டா வர பணத்த வச்சு சந்தோஷமா இருக்கலாம்னு யோச்சிருக்காங்க அந்த கொடூர தாய் மம்தா. இந்த விஷயத்த காதலன் மயங்க், தம்பி ரிஷிகிட்டவும் மம்தா சொல்லிருக்காங்க. பிரதீப்ப கொன்னுட்டா அதுல வர இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய மூணு பேரும் சேந்து பங்கு போட்டுக்குலாம். அதுமட்டுமில்லாம, நம்ம ரெண்டு பேரு இதே மாதிரி பேசிப்பழகி சந்தோஷமா இருக்கலாம், அடிக்கடி தனிமையில சந்திச்சிக்கலாம்னு காதலன் மயங்க்-கிட்ட சொல்லியிருக்காங்க மம்தா. இந்த ஐடியாவுக்கு மயங்க்-கும் சரி சொல்லியிருக்கான்.அடுத்து, கூலிப்படைக்கு கொடுக்குறதுக்காக தன்னோட நகைய மயங்க் கிட்ட கொடுத்து, இந்த நகைய வித்து அதுல வர காச கூலிப்படைக்கு கொடுத்து, பிரதீபோட கதைய முடிக்க ரெடி பண்ணுன்னு சொல்லியிருக்காங்க மம்தா. நகைய வித்து வந்த பணத்தையும், அதுபோக பிரண்ட்ஸ் கிட்ட கடன் வாங்குன பணத்தையும் ரெடி பண்ணி கூலிப்படையை சேந்தவன்கிட்ட கொடுத்திருக்கான் மயங்க். அதுக்கப்புறம், பிரதீப தொடர்பு கொண்டு பேசுன தாய் மம்தா, வீட்டுக்கு சீக்கிரம் வாப்பா ஒன்னா உக்காந்து சாப்பிடலாம் உனக்கு பிடிச்சத சமைச்சு வச்சிருக்கேன்னு பாசமா சொல்லிருக்காங்க. எப்போதும் இல்லாம அம்மா இன்னைக்கி சீக்கிரம் கூப்பிட்றாங்களேன்னு பிரதீபும் பைக்குல வீட்டுக்கு கிளம்பி போயிருக்காரு. அப்ப, வீட்டு கதவு பின்னாடி மறைஞ்சி நின்னுட்டு இருந்த மயங்கும், கூலிப்படைய சேர்ந்தவனும் சேந்து பிரதீப் தலையில சுத்தியாலால ஒரே போடா போட்டுருக்காங்க. அதுல, சுருண்டு விழுந்த பிரதீப, உயிர் போற வரைக்கும் சுத்தியாலால கண்மூடித்தனமா அடிச்சதுல பிரதீப் கொஞ்ச நேரத்துலே துடிதுடிச்சு உயிரிழந்துட்டாரு.அதுக்கப்புறம், கொலைய மறைக்குறதுக்காக மம்தா, மயங்க், ரிஷ், கூலிப்படைய சேந்தவன்னு மொத்த மூணு பேரும், ரிஷியோட சரக்கு வாகனத்துல, பிரதீபோட டெட்பாடிய ஏத்தியிருக்காங்க. பிரதீபோட சடலம் சரக்கு வண்டில ஏத்திவிட்டுட்டு, பின்னாடியே அவரோட பைக்க எடுத்து ஓட்டிட்டு போன மயங்க். கான்பூர் நெடுஞ்சாலை பக்கத்துல இருந்த ஒரு பள்ளத்துல பிரதீபோட சடலத்த போட்டுட்டு, அதுக்கு பக்கத்துலேயே அவரோட பைக்கையும் போட்டு, ஆக்சிடன்ட் மாதிரியே செட்டப் பண்ணிட்டாங்க. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுங்குறதுக்காக பைக்க கம்பியால அடிச்சு டேமேஜ் பண்ணிட்டாங்க. அந்த ஏரியா முழுவதுமே விவசாய நிலங்களும், தோட்டமும்தான் அதிகம்.. ஆள் நடமாட்டம் இல்லாத நேரமா பாத்து மூணு பேரும் சேந்து இவ்வளவு வேலையையும் செஞ்சிருக்காங்க. அந்த பகுதில இருந்த சிசிடிவிய காட்சிய வச்சு கொலையாளிகள் ஒவ்வொருத்தரைம் தூக்குன போலீஸ், முதல மயங்க்-க மடக்கி பிடிச்சு விசாரிச்சப்பதான் மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துச்சு. அடுத்து, பிரதீப் கொலைக்கு முக்கிய புள்ளியா இருந்த தாய் மம்தா, அவங்களோட தம்பி ரிஷு, கூலிப்படைய சேந்தவனு மொத்தம் நாலு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிருக்காங்க காவல்துறையினர்.