ரமலானை முன்னிட்டு துபாயைச் சுற்றியுள்ள மசூதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எமிராட்டி நகரத்தைச் சுற்றியுள்ள 4 மசூதிகளின் முகப்பில் இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமான வடிவங்கள் அமைக்கபட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் ரமலானின் சூழ்நிலையை மேம்படுத்துவதாக பார்வையாளர்கள் கூறினர்.