எத்தியோப்பியாவில் நடைபெற்ற சர்வதேச ஓட்ட பந்தயத்தில் திரளான வீரர்கள் பங்கேற்ற நிலையில் சாலை முழுவதும் மஞ்சள் நிறத்தில் விழா கோலம் பூண்டது.எத்தியோப்பிய தலைநகரான Addis Ababa வில் நடைபெற்ற 10 கிலோ மீட்டருக்கான சர்வதேச ஓட்ட பந்தயத்தில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு 5 ஆயிரம் வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த பந்தயத்தில் இரண்டு இளம்வீரர்கள் வென்று கோப்பையை தட்டிசென்றனர்.